
சிரவை ஆதீனக் காலக்கண்ணாடி
1858-10-15: தவத்திரு இராமானந்த சுவாமிகள் பிறப்பு
1880: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளிடம் தவத்திரு இராமானந்த சுவாமிகள் பழனியில் உபதேசம் பெறல்
1890: சிரவணபுரத்தில் இப்பொழுது அருள்மிகு தண்டபாணிக் கடவுள் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் தவச்சாலை அமைத்தல்
1892-04-18: தவத்திரு கந்தசாமி சுவாமிகள் பிறப்பு
1898-05-07: வண்ணச்சரபம் சுவாமிகள் விழுப்புரத்தை அடுத்த திருவாமாத்தூரில் வீடுபேறு
1908: சந்நிதானங்களின் தவச்சாலையில் அருள்மிகு சித்திமகோற்கட
விநாயகர், தண்டபாணிக் கடவுள் திருக்கோயில் அமைத்தல்
1923-01-29 தவத்திரு கந்தசாமி சுவாமிகள் ஆதீனத்தின் இரண்டாம் பட்டமாகப் திருப்பழனியில் பட்டமேற்றல்
1929-11-29: தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் பிறப்பு
1948-12-10: தவத்திரு கந்தசாமி சுவாமிகள் வீடுபேறு அருள்மிகு தண்டபாணிக் கடவுள் திருக்கோயில் திருக்குட நீராட்டு விழா
1956-12-27: தவத்திரு சந்நிதானங்கள் வீடுபேறு
1964-02-09: தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் ஆதீனத்தின் மூன்றாம் பட்டமாகத் திருப்பழனியில் பட்டமேற்றல்
1966-06-01: அருள்மிகு தண்டபாணிக்கடவுள் திருக்கோயில் திருக்குட நீராட்டு விழா
1970-08-06: தவத்திரு குமரகுருபர சுவாமிகள் பிறப்பு
1972-09-14: அருள்மிகு தண்டபாணிக் கடவுள் திருக்கோயில் திருக்குட நீராட்டு விழா
1978-11-29: தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் பொன்விழா
1979-02-10: புதிய திருத்தேர் வெள்ளோட்டம்
1981: புதிய வெள்ளித்தேர் சுவாமி புறப்பாடு
1982-04-07: அருள்மிகு பாண்டுரங்கப் பெருமான் திருக்கோயில் திருக்குட நீராட்டு விழா
1982-09-10: இராஜகோபுரம், சரவணப்பொய்கை அமைத்து திருக்குட நீராட்டு விழா
1984-01-24: தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் கார் விபத்து
1985-09-02: அருள்மிகு தண்டபாணிக் கடவுள் திருக்கோவில் திருக்குட நீராட்டு விழா
1987-03-25,26,27: உலகப் பெருவேள்வி, கஜபூசை
1988-12-06: தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் மணிவிழாத் தொடக்கம்
1989-11-27: தவத்திரு கஜபூசைச் சுந்தரசுவாமிகள் மணிவிழா நிறைவு
1992-01-11,12: முருகபக்தர்கள் பேரவை முதல் மாநில மாநாடு, பழனி
1994-06-14:l தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் வீடுபேறு. தவத்திரு குமரகுருபர சுவாமிகள் நான்காவது
பட்டமாகக் கெளமார மடாலயத்தில் பட்டமேற்றல்.
1996-09-15 அருள்மிகு தண்டபாணிக்கடவுள் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா
1998-06-19,20,21: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் நினைவு நூற்றாண்டு விழாக் கருத்தரங்கம்
1999-11-27,28: தவத்திரு கந்தசாமி சுவாமிகள் நினைவுப் பொன்விழாக் கருத்தரங்கம்
2001-12-08,09: தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அருளாட்சி விழா, திருப்பழனியில்
2003-11-22,23: தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அவதாரப் பவள விழாக் கருத்தரங்கு
2007-12-27,28,29) தமிழ்க்கடவுள் முருகன் இலக்கிய ஆய்வு மாநாட்டுக் கருத்தரங்கு
2008-11-04: சிரவையாதீன வரலாற்றுக் குறுந்தகடு வெளியீடு
2009-04-13: அருள்மிகு பைரவர் திருக்கோவில் திருக்குடமுழுக்கு
2009-08-30: அருள்மிகு தண்டபாணிக்கடவுள் திருக்கோவில் திருக்குடமுழுக்கு
2009-10-2,3: மாநில முருக பக்தர்கள் பேரவை இரண்டாம் மாநிலமாநாடு, கெLAமாரமடாலயம்
2010-05-21: சுந்தரர் சொற்றமிழ் நூல் வெளியீட்டு விழா
2012-03-24-27: கஜபூசை வெள்ளி விழா
2012-03-22: இராமானந்தத்திரட்டு நூல் வெளியீடு
2012-03-22: தவத்திரு.கந்தசாமி சுவாமிகள் பனுவல் திரட்டு தொகுதி - 1, கஜபூசை வெள்ளிவிழா ஆய்வுரைகள் நூல் வெளியீடு 2012-03-23)
2012-03-23: அறுபத்துமூவர் சிலை நீராட்டு விழா
2012-12-12: கெளமாரம் பிரசாந்தி சிறப்புக் குழந்தைகள் பள்ளி அடிக்கல் நாட்டுவிழா
2012-11-18: தவத்திரு . கஜபூசைச் சுந்தர சுவாமிகள் ஐம்பொன்சிலை திறப்பு விழா.
2012-12-30: மாநில முருகபக்தர்கள் பேரவை மூன்றாவது மாநில மாநாடு, இரத்தினகிரி.
2013-02-03: தவத்திரு. குமரகுருபரசுவாமிகள் முனைவர் பட்டம் பாராட்டு விழா.
2013-04-26,27,28: திருக்குறள் பதிப்பின் 200 ஆம் ஆண்டு ஆய்வு தேசியக் கருத்தரங்கம்
2013-12-21: கெளமாரசபை கலையரங்கு திறப்பு விழா 2015-04-02 பொற்றாமரைக்குளம் திறப்பு விழா
2015-08-15, 16: தமிழ் நாட்டுத் தொல்லியல் பயிலரங்கம்
2017-07-15: சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கருத்தரங்கம்
2018-05-4, 5, 6: அனைத்துலக முருக இலக்கிய மாநாடு கருத்தரங்கம்
2018-10-20, 21: மாநில முருக பக்தர்கள் பேரவை நான்காவது மாநில மாநாடு, திருநெல்வேலி, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் நெல்லை இலக்கியங்கள், கலம்பகம், பிள்ளைத்தமிழ் நூல் வெளியீடு.
2018-11-20: கந்தமுனி போற்றும் கவின்மிகு தலங்கள் நூல் வெளியீடு.
2019-03-21: ஜெனிவா, ஐ.நா. சபையில் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் சிறப்புரை (வரலாற்று நிகழ்வு )
2019-06-8,9: தவத்திரு .கஜபூசைச் சுந்தரசுவாமிகள் 25 ஆம் ஆண்டு குருபூசை, தவத்திரு. குமரகுருபர சுவாமிகள் அருளாட்சி வெள்ளி விழா, தவத்திரு.கந்தசாமி சுவாமிகள் பனுவல் திரட்டு தொகுதி - 2, பக்தமான்மியம் (உரையுடன்)
2019-08-04: தவத்திரு . குமரகுருபர சுவாமிகள் 50 ஆம் ஆண்டு பொன்விழா அருளமுதம் - நூல்